திடீரென கால்பந்து சம்மேளனத்தில் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சர்ச்சை பேர்வழியுமான ரங்காவை அப்பதவியிலிருந்து நீக்கி, சம்மேளனத்தின் நடவடிக்கைகளை சீர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.
ரங்கா பதவியேற்ற பின்னர் குழப்பத்துக்குள் தள்ளப்பட்டுள்ள சம்மேளனம், முற்றாக முடங்கிப் போயுள்ளதாகவும் ஊழியர் சம்பளம் கூட வழங்க முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு தழுவிய ரீதியிலான அனைத்து கால்பந்தாட்டா கழகங்களின் பங்களிப்போடு மீளவும் சம்மேளனத்தை உயிர்ப்பிக்கவும் புதிய நிர்வாகத்தை தேர்வு செய்யவும் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
ரங்காவின் நியமனம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்ததோடு சர்வதேச தடையும் வந்து சேர்ந்திருந்ததைம குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment