மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசுடன் தமது கட்சி எவ்விதமான டீலும் செய்யவில்லையெனவும் இவ்வாறு உலவும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகய தலைவர் சஜித் பிரேமதாச.
தேசிய அரசமைப்பதற்கு ஜனாதிபதி முயல்கின்ற நிலையில் சமகி ஜன பல வேகயவின் பங்காளிகள் மனோ கணேசனும் - ஹக்கீமும் மும்முரமாக பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றனர். எனினும், சஜித் தரப்பு இணங்கவில்லையென அண்மையில் மனோ விளக்கமளித்திருந்தார்.
ஆயினும், தேசிய அரசில் இணைவது காலத்தின் கட்டாயம் என ராஜித விளக்கமளித்து வரும் நிலையில், ரணில் தமது பழைய பங்காளிகளுடன் கை கோர்க்கலாம் என்ற ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment