நாட்டில் இனவாதத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றிய அத தெரண ஊடக நிறுவனத்தின் தலைவர் திலித் ஜயவீரவுக்கு ஆட்சியதிகாரத்தின் மீது 'மோகம்' வளர்ந்து வருவதாக பல்வேறு சிங்கள மொழித் தளங்கள் சுட்டிக்காட்டி தகவல் வெளியிட்டுள்ளன.
ஊடக தர்மத்துக்குப் புறம்பாக, இனவாதத்தை எண்ணையூற்றி வளர்ப்பதில் 2012 முதல் அத தெரண வகித்து வரும் பங்கு நாடறிந்தது. ராஜபக்ச குடும்பத்தினருக்கு ஆதரவு வழங்குவதாகக் காட்டிக் கொண்ட தெரண ஊடக தலைவர் கடந்த வருடம் முதல் முரண்பாட்டையும் வெளிக்காட்டி வருகிறார்.
இந்நிலையில், வலிந்து சென்று சமூக சேவைகள் செய்து தன்னையும் ஒரு 'வேட்பாளராக' உருவாக்கிக் கொண்டு வருவதாகவும் நாட்டின் முக்கிய பதவியைப் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வாறு தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment