முக்கிய சந்திப்புகளை நடாத்தும் ரணில் - சஜித் - மைத்ரி - sonakar.com

Post Top Ad

Monday 24 April 2023

முக்கிய சந்திப்புகளை நடாத்தும் ரணில் - சஜித் - மைத்ரி


  



ஆளுங்கட்சியினருடன் இன்றைய தினம் முக்கிய அரசியல் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. தேர்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை ஆராயவுள்ளதாக அறியப்படுகின்ற அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தமது கட்சிக்காரர்களோடு இன்று ஒன்று கூடி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஏலவே சமகி ஜன பல வேகய உறுப்பினர்கள் ரணில் பக்கம் சாய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்படுகின்ற நிலையில் சஜித் இச்சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில், தமது கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பதவிகளைப் பெற்றவர்களை மீண்டும் கட்சிப் பாதைக்குள் கொண்டுவருவது குறித்து ஆராய மைத்ரிபால சிறிசேனவும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுடன் இன்று கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உள்ளூராட்சித் தேர்தல் தள்ளிப் போயுள்ள நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்கு பலம் சேர்ந்துள்ளதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment