தாய்லாந்தில், தகவல் தொழிநுட்பத் துறையில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி இலங்கையர் ஏமாற்றப்பட்டு வருவதாக அங்கு இயங்கும் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி தகவல் தொழிநுட்ப நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இவ்வகை விளம்பரங்கள், பணம் பறிக்கும் செயற்பாடெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் அங்கு வந்ததும், வேலை வாய்ப்புக்கான விசா மாற்றித் தரப்படும் என இலங்கையர் ஏமாற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment