பொது வேலைத்திட்டம் இருந்தால் இணைவோம்: கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Tuesday 18 April 2023

பொது வேலைத்திட்டம் இருந்தால் இணைவோம்: கம்மன்பில

 



தேசிய அரசமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதற்கான பொது வேலைத் திட்டம் என்னவென்பதைத் தெளிவு படுத்த வேண்டும் என்கிறார் உதய கம்மன்பில.


அதனடிப்படையில், தேசிய அரசில் இணைவதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.


உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறப் போவதில்லையென கருதப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமானால், நாட்டை முன்னேற்ற ஏனையோரின் ஒத்துழைப்பில்லாமல் போனதை நிரூபிக்கும் வாய்ப்பை ரணில் உருவாக்குவதாக அவதானிகள் விமர்சனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment