இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் வெளியார் தலையீடு காரணமாக சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இழந்துள்ள இலங்கை, 2024ல் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் கால்பந்தாட்ட தேர்வுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழக்கவுள்ளது.
மே 11ம் திகதிக்குள் குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், கூடுதலாக 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தேர்விலும் பங்கேற்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் தேர்வில் அமைச்சரின் தலையீட்டின் பின்னணியில் சர்ச்சைகள் உருவானதோடு அதன் பின்னணியில் இடைக்கால தடையையும் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment