இலங்கை மத்திய வங்கியின் வெளியீட்டு பெட்டகத்தில் வைக்கப்படட்டிருந்த 50 லட்ச ரூபா பணம் மாயமான சம்பவத்தின் பின்னணி தொடர்பில் குற்றவியல் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மூன்றாவது மாடியிலிருந்து மாயமாகியுள்ள குறித்த தொகை பணம் திருடப்பட்டுள்ளதா அல்லது வேறு எங்கும் தவறுதலாக வைக்கப்பட்டுள்ளதா என்று கண்டறிய இவ்விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பின்னணியில், குறித்த பிரிவில் அன்றைய தினம் பணியாற்றிய 15 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment