$250 மில்லியன் லஞ்சம் பெற்ற நபர்: விஜேதாச தகவல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 25 April 2023

$250 மில்லியன் லஞ்சம் பெற்ற நபர்: விஜேதாச தகவல்

 



எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட இழப்பை மூடி மறைக்க 250 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்ற நபர் சாமர குணசேகர என தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டுள்ளார் விஜேதாச ராஜபக்ச.


எனினும், இதனை விசாரித்து உறுதிப்படுத்த வேண்டியது பாதுகாப்பு அமைச்சின் கடமையெனவும் தன்னால் அதனை உறுதி செய்ய முடியாது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


அத்துடன், இலங்கையரசு கோரக்கூடிய இழப்பீட்டை மட்டுப்படுத்துவதற்கான வழக்கொன்றும் ஐக்கிய இராச்சியத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை எதிர்த்து அரச தரப்பில் வாதிடுவதாகவும் விஜேதாச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment