எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் உரிமையாளர்களால் இலங்கைக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டை தவிர்ப்பதற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக அரசியல் மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சாமர குணசேகர எனும் நபரின் அடையாளத்தை தேட ஆரம்பித்துள்ளனர் குற்றவியல் விசாரணை பிரிவினர்.
இங்கிலாந்தின் வங்கியொன்றில் இப்பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அது குறித்த எதுவிதமான உறுதியான தகவலும் இல்லையெனவும் சாமர குணசேகர என்பவர் யார் என அடையாளம் தெரியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறித்த நபர் கோட்டாவின் சகா என நேற்றைய தினம் சந்திம வீரக்கொடி தெரிவித்திருந்தமையும், இவ்வாறு ஒரு நபர் இருப்பதாக விஜேதாச ராஜபக்ச நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment