IMF நிதி மூலம் 'பொருளாதாரம்' மட்டுமே சீராக்கப்படும்: ரவி - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 March 2023

IMF நிதி மூலம் 'பொருளாதாரம்' மட்டுமே சீராக்கப்படும்: ரவி

 



சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப்பெறும் கடனுதவியைக் கொண்டு பொருளாதாரத்தை சீர்படுத்தும் நடவடிக்கைகள் மாத்திரமே இடம்பெறும் என விளக்கமளித்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருனாநாயக்க.


கிடைக்கப்பெறும் கடன் தொகையைக் கொண்டு 'கையிருப்பை' அதிகரிப்பதனூடாக மேக்ரோ பொருளாதார சீர்திருத்தம் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கின்ற அவர், இதனூடாக முதலீட்டு போட்டியை உருவாக்கி வெளிநாடுகளிலிருந்து குறைந்த வட்டியில் நீண்ட கால கடன்களைப் பெற்று, இருக்கும் கடன் சுமைகளைக் குறைக்க முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்தில் ஈடுபடுவதன் மூலம், பொருளாதார சீர்திருத்தங்களின் நம்பகத்தன்மையை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment