IMF கேட்ட சீன உத்தரவாதத்தை கொடுத்து விட்டோம்: ரணில் - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 March 2023

IMF கேட்ட சீன உத்தரவாதத்தை கொடுத்து விட்டோம்: ரணில்

 



இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் மறு சீரமைப்பின் போது சீனா வழங்க வேண்டியிருந்த பங்களிப்பு உத்தரவாதத்தினை உத்தியோகபூர்வமாக சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கி விட்டதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.


சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து இதற்கான கடிதம் கிடைக்கப் பெற்ற கையோடு அதனை சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கி விட்டதாகவும், இத்தோடு சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடம் முன் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இப்பின்னணியில், இம்மாதம் இறுதியளவில் சர்வதேச நாணய நிதியம் தமது 'பங்களிப்பை' செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment