இலங்கையில் வழங்கப்படும் தொழிநுட்ப தகைமைகளை உத்தியோகபூர்வமாக அங்கீகரிப்பதற்கு சவுதி அரசு இணங்கியுள்ளது.
இலத்திரனியல், மோட்டார் வாகன தொழிநுட்பம் உட்பட 23 வகையான தகைமைகளை அங்கீகரித்து அதற்குரிய தொழில்வாய்ப்புகளை வழங்குவதே இதன் அடிப்படையென வெளிநாட்டு பணியகம் விளக்கமளித்துள்ளது.
இலங்கையில் பெறப்படும் தகைமைகளுக்கு சவுதியில் போதிய அங்கீகாரம் வழங்கப்படாமையினால் பெரும்பாலானவர்கள் தமது தகுதிக்கு குறைந்த தொழில் வாய்ப்புகளையே பெற்று வந்ததாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டுப் பணியகம் இது தொடர்பிலான அறிவுறுத்தல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment