வைத்தியர்கள் இல்லை: குழந்தைகள் 'வார்ட்' பூட்டு - sonakar.com

Post Top Ad

Friday 31 March 2023

வைத்தியர்கள் இல்லை: குழந்தைகள் 'வார்ட்' பூட்டு

 



அநுராதபுர போதனா வைத்தியசாலையின் 63ம் வார்ட் என அறியப்படும் குழந்தைகள் வார்ட் மூடப்பட்டுள்ளது.


இங்கு கடமையாற்றிய வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றுள்ள நிலையில் மாற்றீடின்மையே இதற்கான காரணம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


ரஜரட்ட பல்கலையின் நேரடிய தொடர்பில் இயங்கி வந்த குறித்த வார்ட் மூடப்பட்டுள்ள நிலையில், இதற்கு பகரமாக வேறு இரண்டு வார்ட்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் எனினும் மருத்துவ மாணவர்களுக்கு பயிற்சி பெறும் தளம் தடைப் பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

No comments:

Post a Comment