தேர்தல் ஆ.குழு கூட்டம்; நிதியமைச்சின் செயலாளர் 'இல்லை' - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 March 2023

தேர்தல் ஆ.குழு கூட்டம்; நிதியமைச்சின் செயலாளர் 'இல்லை'

 


 

உள்ளூராட்சித் தேர்தலுக்கான புதிய தேதியை அறிவிக்க முன்பதாக நிதி விவகாரத்தினை ஆராய்வதற்காக இன்றைய தினம் தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் நிதியமைச்சின் செயலாளர் கலந்து கொள்ளவில்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றதால் இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லையென நிதியமைச்சின் செயலாளர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.


ஒரே நாளில் 'இரு' சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும், தொடர்ந்து வந்த தேர்தல் சர்ச்சையை, பின் போடுவதற்கு ஒரு 'தேர்தல்' இல்லையென விளக்கமளித்து ஜனாதிபதி முற்றுப்புள்ளி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment