சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி அனுமதி கிடைத்துள்ளமையானது வாசல் கதவை திறந்து விட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் நசீர் அஹமது.
குறித்த கடன் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதையடுத்து முதற் கட்டமாக இலங்கைக்கு 333 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ள அதேவேளை நான்கு வருடங்களுக்கு 3 பில்லியன் டொலர் நிபந்தனையுடனான வேலைத் திட்டத்தின் அடிப்படையில் கிடைக்கவுள்ளது. ஆயினும், இது தொடர்பில் நாடாளுமன்றில் பொது இணக்கத்தைக் காண வேண்டிய தேவையும் உள்ளது.
இந்நிலையில், இக்கடன் வசதி அனுமதி அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கொண்டாடப்படுகின்றமையும், இப்பின்னணியில், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி உதவிகளும் வந்து சேரவுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டுமெனவும் நசீர் அஹமது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment