ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது.
வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ஒவ் டெமோகிரசி என்ற அமைப்பின் அனுசரனையில் குறித்த குழுவினர் ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்திற்கு எவ்வாறான பாடங்களை கற்றுகொள்ள முடியும் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கை அரசியல் பிரமுகர்களையும்இ அரசியலில் ஈடுபாடுள்ள தரப்பினரை சந்தித்த ஸ்கொட்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் மநnநெவா த பipளழnஇ மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனியாக சந்தித்து இதன்போது பேசியுள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கையில் இருந்தது போன்றதொரு நிலைமையினையே தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசவுள்ளதாக முநnநெவா த பipளழn இதன்போது சாணக்கியனிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு விஜயம் செய்யும்போது தமிழ் தரப்பினரை சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் இரா.சாணக்கியனிடம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment