தனியொருவராக போராடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாதித்து விட்டதாக புகழாரம் வெளியிட்டுள்ளார் ஹிருனிகா பிரேமசந்திர.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக் கரம் கிடைத்தமை ரணில் விக்கிரமசிங்க எனும் தனி மனிதன் மீதான நம்பிக்கையிலேயே எனவும் விளக்கமளித்துள்ளார் அண்மைக்காலமாக தீவிர ரணில் எதிரியாக ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வந்த ஹிருனிகா.
இச்சூழ்நிலையில், எதிரணியினர் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டிய கடமையுள்ளதாகவும் ஹிருனிகா சுட்டிக்காட்டியுள்ளமையும் பிரதான அரசியலின் 'போக்கு' மாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment