ஹம்பாந்தோட்டையில் அரசு திட்டமிடும் புதிய எண்ணை சுத்திரகரிப்பு நிலையத்தினை எடுத்து நடாத்துவதற்கு ஆர்வமுள்ள ஏழு நிறுவனங்களிமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ள போதிலும் சீனாவின் சினோபெக் தவிர ஏனைய நிறுவனங்கக்கு அதற்கான தகுதியில்லையென தமது 'ஆய்வை' மையப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது டெய்லி மிரர்.
விண்ணப்பித்துள்ள நைஜீரிய நிறுவனமொன்று போலியானது எனவும், ஏலவே நிதி மோசடியில் ஈடுபட்ட வேறு நிறுவனங்களும் இதற்குள் அடங்குகின்ற நிலையில், இலங்கை அரசினால் முன் வைக்கப்பட்டுள்ள தகுதி காண் வரையறைகள் முழுமையாக சீன நிறுவனத்துக்கு மாத்திரமே இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏலவே ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment