முடங்கிப் போயுள்ள 'முட்டைகள்' : அமைச்சர் விசனம் - sonakar.com

Post Top Ad

Saturday, 25 March 2023

முடங்கிப் போயுள்ள 'முட்டைகள்' : அமைச்சர் விசனம்

 



இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்களே பாதிக்கப்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் நலின்.


இந்தியாவில் ஏற்பட்ட தாமதத்தையும் தாண்டி இலங்கை வந்தடைந்துள்ள முட்டைகள் இலங்கை சட்டவிதிகளுக்கமைவான பரிசோதனைகள் முடிவடையாததால் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


பண்டிகைக் காலமும் நெருங்கி வரும் நிலையில் அதிகாரிகளின் மந்த போக்கு மக்களை அவதிக்குள்ளாக்குவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment