சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியூடாக இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது முதற்தொகுதி 333 மில்லியன் டொரலரிலிருந்து 121 மில்லியன் டொலரை இந்தியாவின் கடனையடைக்க உபயோகப்படுத்தி விட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக மத்திய வங்கியிலேயே பணம் வைப்பிலிடப்படுகின்ற போதிலும், தற்போதைய கடன் வசதியை நேரடியாக திறைசேரிக்கே வழங்குவதன் ஊடாக கிடைக்கும் கடன் இருக்கும் கடனையடைக்கப் பயன்படுவதாக அமைச்சர் சியம்பலபிட்டிய விளக்கமளித்துள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை மறு சீரமைப்பதில் இந்தியா 'முன் நின்று' பங்களித்து முதலாவதாக பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment