உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் இடம்பெறுவது பாரிய சந்தேகத்தை உருவாக்கியுள்ள நிலையில், பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் பழைய உறுப்பினர்களையே தொடர்ந்தும் இயங்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் பசில் ராஜபக்ச.
தேர்தலை நடாத்தாது விடுவது ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடாத்த எத்தனித்து வரும் நிலையில், உத்தியோகப்பற்றற்ற முறையில் பழைய உறுப்பினர்களை தொடர்ந்து இயங்க வழி செய்வதாக பசில் தெரிவிக்கிறார்.
பெரும்பாலும் நிதி நெருக்கடியைக் காரணங்காட்டி தேர்தலை அரசு பின் போடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment