வங்குரோத்தில் உள்ளதாகக் கருதப்படும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அனுமதியை நம்பியிருக்கும் அரசு, நாளை திங்கட்கிழமையை வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் நாளை முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேசன நாணய நிதியம் கை கெடுப்பதென்பது, இலங்கை சரியான பாதையில் செல்கிறது என்பதை எடுத்துக்காட்டும் எனவும், எனினும், இது 'வெறும்' ஆரம்பம் மாத்திரமே எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment