உள்ளூராட்சித் தேர்தலுக்கு புதிய தேதி அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 10 March 2023

உள்ளூராட்சித் தேர்தலுக்கு புதிய தேதி அறிவிப்பு

 



நேற்றைய தினம் இடம்பெறும் என முன்னர் பரவலாக பேசப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடாத்தப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.


கடந்த தடவை, தேர்தல் அறிவிப்பொன்று சட்டபூர்வமாக இடம்பெறவில்லையென ஜனாதிபதி ரணில் அறிவித்திருந்ததையடுத்து புதிய தேதியை நிர்ணயிக்க தேர்தல் ஆணைக்குழு கூடி ஆராய்ந்திருந்தது.


இந்நிலையில், இன்று அதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment