சுமார் 3 பில்லியன் டொலர் பெறுமதியான கடனுதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அனுமதித்துள்ள அதேவேளை அதில் 333 மில்லியன் டொலர் முதற் கட்டமாக எதிர்வரும் சில நாட்களுக்குள் வழங்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உருவாகும் புதிய சூழ்நிலையில், முதலில் ஏலவே இருக்கும் கடன்களை மறுசீரமைப்பதற்கு ஏப்ரல் இறுதி வரை கால அவகாசத்தை இலங்கை பெற்றுக் கொள்வதோடு ஆறு மாதங்களுக்கொரு தடவை சர்வதேச நாணய நிதியம் சூழ்நிலையை மீளாய்வு செய்யும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை அதாள பாதாளத்துக்குள் தள்ளிய முன்னாள் ஆட்சியாளர்கள் பதவி விலகியிருந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக் கொள்ளும் நம்பிக்கையில் ரணில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment