உள்ளூராட்சி தேர்தலை அரசு பின் போட்டதன் விளைவாக மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து CPA அமைப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், ஜுன் 27ம் திகதி தேதி குறித்துள்ளது.
குறித்த வழக்கின் பிரதிவாதிகளை பட்டியலிடுவதில் தவறு நிகழ்ந்திருப்பதாகவும், தேர்தல் ஆணைக்குழு குறிப்பிடப்படாமல் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை பிரதிவாதிகளாக சேர்த்திருப்பது ஏற்புடையதல்ல என்று வாதிட்ட போதிலும் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது நீதிமன்றம்.
19ம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் முடிவுறுகின்றமையும் ஏப்ரலில் ஒரு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment