டொலர் 185 ரூபாவாகும்: 'கப்டன்' ரணில் நம்பிக்கை - sonakar.com

Post Top Ad

Monday, 20 March 2023

டொலர் 185 ரூபாவாகும்: 'கப்டன்' ரணில் நம்பிக்கை

 



றோயல் - தோமியன் கிரிக்கட் போட்டியில், றோயல் கல்லூரி அபார வெற்றியைப் பெற்றதன் பின்னணியில் அவ்வணியின் தலைவர் எவ்வாறு பங்களித்தாரோ, அவ்வாறே தானும் நாட்டின் செயற்பாட்டுக்கு பங்களித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.


சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைப்பது வெறும் ஆரம்பமே என தெரிவித்துள்ள அவர், இதன் தொடர்ச்சியில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்தி, டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியை 185 ரூபா வரை கொண்டு செல்வதே இலக்கெனவும் விளக்கமளித்துள்ளார்.


மூழ்கிப் போயுள்ள இலங்கையின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தும் கப்டனாக தன் கடமைகளை செய்வதாக அவர் பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment