தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபரானால் நாட்டு மக்களின் நிலை பரிதாபமாகி விடும் என்கிறார் ஹிருனிகா பிரேமசந்திர.
தனது தந்தையின் கொலையின் போது, துமிந்த சில்வாவின் வாகனத்தில் தேசபந்து தென்னகோன் இருந்ததாகவும் தெரிவிக்கின்ற அவர், தென்னகோனின் நடவடிக்கைகள் மக்கள் விரோதமானவை எனவும் அரகலயில் ஈடுபட்டவர்கள் அதீத துன்பங்களை சந்திக்க நேரிடும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்துக்கு முன்பு தாம் நடாத்திய போராட்டத்தின் போது, தம்மை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் தேன்னகோன் உத்தரவிட்டதாகவும், இப்பேற்பட்ட ஒரு நபர் பொலிஸ் மா அதிபரானால் அது 'ரணில் ராஜபக்சவின்' தேவைகளை நிவர்த்தி செய்யுமே தவிர, மக்களின் நிலை பரிதாபமாகி விடும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment