ஹெலிகப்டர் மெதமுலனயில் தரையிறங்கும்: சாகர - sonakar.com

Post Top Ad

Friday, 3 February 2023

ஹெலிகப்டர் மெதமுலனயில் தரையிறங்கும்: சாகர

 



பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்று ஹெலிகப்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ள அதிருப்தியாளர்கள் குழு, மீண்டும் மொட்டுக் கட்சியோடு இணையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்.


தேர்தல் காலத்தில் ஒன்றாக இருந்த போதிலும், அதிகாரப் பகிர்வில் அதிருப்தி உருவானதோடு கோட்டாபயவின் செயற்பாடுகளால் பிரிந்து சென்றதாகக் கூறும் விமல் - கம்மன்பில குழு ஹெலிகப்டர் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.


எனினும், மஹிந்த ராஜபக்சவின் சகாக்களான இக்குழு தேர்தலின் முன்போ - பின்போ இணையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றமையும், தேர்தல் காலத்தில் 'தனித்துவம்' பேசும் முஸ்லிம் கட்சிகளும் தேர்தலின் பின்னர் ஏதாவதொரு கட்சிக்கு முட்டுக் கொடுத்து, அதனை 'சாணக்கியம்' அல்லது 'இணக்கப்பாட்டு' அரசியல் என்று மக்களை நம்ப வைத்து வருவதும், இதை சில காலத்துக்கு விமர்சிக்கும் மக்கள் மீண்டும் தேர்தல் காலத்தில் அதனை மறந்து வரும் வாடிக்கையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

No comments:

Post a Comment