பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் யார் மீதும் மக்களுக்கு 'வெகுவான' நம்பிக்கையில்லையென கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையில், சஜித் மற்றும் அநுர குமார ஆகியோருக்கிடையே 'போட்டி' நிலவுவதாக கருதப்படுகின்ற போதிலும், அண்மைய Sri Lanka Opinion Tracker Survey (SLOTS) கருத்துக்கணிப்புகளின் பிரகாரம் கடந்த வருடம் மே மாத சூழ்நிலைக்குப் பின் ஏற்பட்ட கோட்டாபய மீதான வெறுப்பும் தணிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பீட்டளவில் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் குறைந்த அளவிலேயே 'எதிர்மறை' நிலைப்பாடு காணப்படுகின்ற போதிலும், ரணில் தொடர்ந்தும் மக்களால் விரும்பப்படும் நபராக இல்லையென்கிற நிலையில், சஜித் - அநுர முன்னிலைப்படுத்தப்படுகின்றமையும், எதிர்வரும் தேர்தலில் அநுர தரப்பினர் பாரிய வெற்றியை எதிர்பார்க்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment