நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கு பணம் இல்லாது போயுள்ள நிலையில், மக்களிடமே அதற்கு பணம் சேர்ப்பதற்கான நிதி சேகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அரசு உத்தேசித்து, ஆலோசித்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார் பந்துல குணவர்தன.
இந்நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு, அரசு முதலில் 100 மில்லியன் ரூபா வழங்கும் எனவும், அதற்கு மேலதிகமாக மக்களிடமே பணத்தை சேகரிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
வருமான வரிக்கு மேலதிகமான இந்நிதி சேகரிப்பினை 'எரிபொருள்' ஊடாக மேற்கொள்வதற்கு ஆலோசிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment