தே.ஆ. குழு உறுப்பினரின் இராஜினாமா ஏற்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 February 2023

தே.ஆ. குழு உறுப்பினரின் இராஜினாமா ஏற்பு

 



தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து தான் விலகிக் கொள்வதாக திருமதி பி.எஸ்.ம். சார்ள்ஸ் வழங்கியிருந்த இராஜினாமா கடிதத்தினை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி தரப்பு அறிவித்துள்ளது.


உள்ளூராட்சித் தேர்தலை பின் போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவை கலைக்க முயல்வதாக தகவல்கள் வெளியாகி வந்த போதிலும், ஏலவே அறிவிக்கப்பட்ட தேர்தலை நிறுத்தும் அதிகாரம் புதிதாக நியமிக்கப்படும் ஆணைக்குழுவுக்கும் இல்லையென்பது தெளிவு படுத்தப்பட்ட நிலையில் இவ்விவகாரம் தணிந்துள்ளது.


எனினும், ஏலவே வழங்கப்பட்ட இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், புதிய உறுப்பினர் மாற்றீடாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment