நாட்டின் நலன் கருதி அரசியல்வாதிகளை புதிய மாற்றத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
நாடாளுமன்றின் புதிய தவணையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, மாற்றம் நமக்குள் இருந்து உருவாக வேண்டும் எனவும் அரசியல்வாதிகள், அரசியல் முறைமைகள், பொது சேவையென அனைத்து கோணங்களிலும் மாற்றம் உருவாக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், ஜனாதிபதியின் உரைக்கு முன்பாகவே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment