உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் ஊடாக நாடாளும் பயணத்தைத் தொடங்கப் போவதாக தெரிவிக்கும் சஜித் பிரேமதாச, ஆட்சியைக் கைப்பற்றியதும் முதல் வேலையாக ராஜபக்ச குடும்பத்தினரால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் டொலர்களை மீட்கப் போவதாக தெரிவிக்கிறார்.
2014ல் இதே அடிப்படைப் பிரச்சாரத்தினூடாகவே ரணில் - மைத்ரி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும் இறுதி வரை ஒரு டொலரும் மீட்கப்பட்டாத அதேவேளை மீண்டும் ராஜபக்சக்கள் அதிகாரத்தையும் கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில், மீண்டும் சஜித் பிரேமதாச இப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment