நாடு இருக்கும் நிலையில் சுதந்திர தின கொண்டாட்டத்தை நடாத்துவது பண விரயம் என கூறும் சமகி ஜன பல வேகய தலைவர், இந்நிகழ்வினை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இப்பின்னணியில், குறித்த கட்சியினர் நாளைய நிகழ்வுகளை புறக்கணிக்கவுள்ளதாக தீர்மானித்துள்ள அதேவேளை, சுதந்திர தின கொண்டாட்டத்தினை நடாத்துவது நாட்டின் 'கௌரவம்' சார்ந்தது என ஜனாதிபதி ரணில் அண்மையில் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
நீண்ட காலமாக நாட்டின் உச்ச அதிகாரத்தைப் பெறுவதற்குப் போராடிய ரணில் விக்கிரமசிங்க, கடந்த வருடம் ஏற்பட்ட அரசியல் குழறுபடிகளின் இடையில், ஜனாதிபதி அதிகாரத்தினை ராஜபக்சக்களின் வரமாகப் பெற்றுக் கொண்டமையும், தற்சமயம், தனது கடமையை சரியாகவே செய்து வருவதாக, முன்னாள் எதிராளிகளான பெரமுனவினராலேயே போற்றப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment