மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஏதுவாக தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக பரவி வரும் தகவலை மறுத்துள்ளது பிரதமர் அலுவலகம்.
எந்தவொரு அழுத்தமோ, கோரிக்கையோ இல்லையெனவும் பிரதமர் தனது கடமைகளைத் தொடர்வதாகவும் பிரதமர் அலுவலகம் அறிஉ;கை விளக்கமளித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை மையமாக வைத்து மீண்டும் மஹிந்த எழுச்சியை உருவாக்க பெரமுனவின் ஒரு தரப்பினர் முயல்கின்ற போதிலும், தேர்தல் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையென ஜனாதிபதி தெரிவித்ததோடு தேர்தல் நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment