மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்.
நீர் விநியோக நடவடிக்கைகளில் மின்சாரம் ஆளுமை செலுத்துவதால், அதிகரித்துள்ள மின் கட்டணங்களுக்கேற்ப தண்ணீருக்கான கட்டணமும் உயரும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் சூரிய ஒளி மின் பயன்பாட்டைக் கொண்டு எதிர்காலத்தில் செலவுகளைக் குறைப்பதற்கான திட்டங்களும் உள்ளதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment