அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசியல் அணியில் தமது தரப்பும் இணைந்து கொள்வதற்கான வாய்பிருப்பதாக தெரிவிக்கிறார் கம்மன்பில.
வெற்றி பெறும் பக்கம் எதுவாக இருந்தாலும் அந்தப் பக்கத்தில் தாமும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற வழமையான இலங்கை அரசியல் கோட்பாட்டுக்கமைவாக அநுரவுடன் தாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கின்ற கம்மன்பில, உருவாகும் அரசியல் சூழ்நிலையை வைத்து 'இணைவது' குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கிறார்.
ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்ற விமல் வீரவன்சவும் - கம்மன்பிலவும் நகமும் சதையும் போன்ற அரசியல் கூட்டாளிகளாகத் திகழ்கின்றமையும், எதிர்வரும் காலம் தமக்கு சாதகமாக அமையும் என ஜே.வி.பி தரப்பினர் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment