நியாயபூர்வமான தேர்தலை நடாத்துவதற்கு ஏதுவாக, ஊழல் மற்றும் துஷ்பிரயோக நடவடிக்கைகள் மலிந்து காணப்படும் உள்ளூராட்சி சபைகளை விரைவாக கலைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அரச மட்டத்தில் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச தளபாடங்கள் மற்றும் சொத்துக்களை தேர்தல் நடவடிக்கைக்குப் பாவிப்பதைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக இது தொடர்பில் ஆராயப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்பர விளக்கமளித்துள்ளதுடன் தேர்தல் ஆணைக்குழு, இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேசுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரி 8ம் திகதிக்குள் ஜனாதிபதி இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார் எனவும் ஜனக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment