எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமது கட்சி பாரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அநுர குமார திசாநாயக்க, அடுத்து ஜனாதிபதி அதிகாரத்தைப் பெறுவதும் உறுதியென தமது ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிகளில் இடம்பெற்ற ஊழல்களால் மக்கள் வெறுப்பில் உள்ளதாகவும் சீரான ஆட்சியைத் தர தமது கட்சியொன்றே தீர்வெனவும் அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, அரசு இறுதி நேரத்தில் தேர்தலை நடாத்தாமல் விடுவதற்கான வழிவகைகளைக் கையாளக் கூடும் என்கிற சந்தேகமும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment