தான் ஜனாதிபதியானால் அனைத்து ஜனாதிபதி மாளிகைகளையும் கல்வி நிலையங்களாக மாற்றப் போவதாக தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
ஏலவே, தனக்கு அதிகாரம் கிடைத்தால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இலகுவாக கிடைக்கும் என்பது உட்பட பல்வேறு 'இலகு' வழிகள் பற்றி பிரச்சாரம் செய்து வரும் சஜித், தமது கட்சி எதிர்வரும் தேர்தலில் பாரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டு வருகிறார்.
இப்பின்னணியில், ஜனாதிபதி மாளிகைகளை தொழிநுட்ப மற்றும் ஆங்கில மொழி கல்வி நிலையங்களாக மாற்றப் போவதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment