13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்குத் தயாராவதாக அண்மையில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்து, நாட்டில் 'குழப்பத்தை' ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றன மூன்று பிரதான நிக்காயக்களின் உயர் பீடங்கள்.
அதிகாரப் பகிர்வை மையமாகக் கொண்ட 13ம் திருத்தச் சட்டத்தினூடாக, பொலிஸ் மற்றும் நில அதிகாரங்களும் பகிரப்படும் எனவும் அது நாட்டின் இறையான்மையை பாதிக்கும் எனவும் பௌத்த உயர் பீடாதிபதிகள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கல் என்கிற அத்தியாயம், தேர்தல் காலத்தில் இன வேறுபாடுகளை உருவாக்குவதற்கான அடிப்படையாக தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment