துருக்கி, சிரியா பகுதிகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் பின்னணியிலான மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், மரண எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.
இரு நாடுகளிலிருந்தும் வெளியிடப்பட்டுள்ள இறுதியான உத்தியோகபூர்வ எண்ணிக்கை பிரகாரம், துருக்கியில் 6957 பேரும் சிரியாவில் 2500 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக நாடுகள் பலவும் தமது ஆதரவுக் கரத்தை வழங்கி வருகின்றன.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள யுக்ரேனிலிருந்தும் 'அனுபவமுள்ள' மீட்பு நடவடிக்கைக் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment