துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தின் விளைவாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டியுள்ளது.
துருக்கியில் மாத்திரம் 3419 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 20,000 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும், சுமார் 6000 கட்டிடங்கள் சரிந்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சிரியாவில் 1602 மரணங்கள் (இதுவரை) பதிவாகியுள்ளதாhக அந்நாட்டின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும, அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலையால் உத்தியோகபூர்வமான எண்ணிக்கை தொடர்பில் கருத்து வேறுபாடுகளும் நிலவுகின்றன. 7.5 மற்றும் 7.8 ரிக்டர் நில நடுக்கத்தினால் இப்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment