கொழும்பு மேயர் பதவியைக் கைப்பற்றுவதில் சமகி ஜனபல வேகய மிகத் தீவிரமாக இயங்கி வரும் நிலையில், நேற்று முன் தினம் நாம் வெளியிட்டிருந்த தகவலுக்கேற்ப இன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் முஜிபுர் ரஹ்மான்.
எதிர்த்தரப்பில் பைசர் முஸ்தபாவைக் களமிறக்குவதற்கான எத்தனிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை ரோசி சேனாநாயக்க ஓரங்கட்டப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மேயர் பதவியைக் குறி வைத்து ஹிருனிகா மேற்கொண்ட முயற்சிகள் கை கூடாத போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியினர் 'வேறு' வகையில் வாக்கு வங்கியை சிதைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment