ராஜபக்ச குடும்ப அதிகாரத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மக்கள் தம்மிடம் ஆட்சியதிகாரத்தைக் கையளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தீவிர தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது மக்கள் விடுதலை முன்னணி.
அந்த வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பி முக்கியஸ்தருமான சுனில் ஹந்துன்நெதி மாத்தறை நகராதிபதி பதவிக்காக களமிறங்கியுள்ளதுடன் வசந்த சமரசிங்க அநுராதபுரத்தில் களமிறங்கியுள்ளார்.
இதேவேளை, தாம் ஆட்சிக்கு வந்தால் தேர்தல்களை தடுப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் ஏலவே ஜே.வி.பி தரப்பிலிருந்து 'எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment