டயானாவுக்கு மேலும் கால அவகாசம்! - sonakar.com

Post Top Ad

Friday, 27 January 2023

டயானாவுக்கு மேலும் கால அவகாசம்!

 



வெளிநாட்டுப் பிரஜையான டயானா கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என தொடுக்கப்பட்டிருந்த வழக்கில்,  தனது பக்க ஆவணங்களை சமர்ப்பிக்க முன்னதாக டயானா கமகேவுக்கு கால அவகாசம் வழங்கியிருந்தது நீதிமன்றம்.


எனினும், இதுவரை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத டயானா தரப்பு, மேலும் இரு மாதங்கள் கால அவகாசத்தை பெறுவதற்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் வாதிட்டுள்ளது. இதனை எதிர்த்த மனுதாரர் ஒசல ஹேரத் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதற்குப் புறம்பான சூழ்நிலை உருவாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.


எனினும், இரு தரப்பு வாதங்களையும் செவி மடுத்த நீதிபதிகள், மேலும் இரு வாரங்கள் டயானாவுக்கு கால அவகாசத்தை வழங்கியுள்ளமையும், நாட்டின் சுற்றுலாத் துறை அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட உத்தியோகபூர் வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக டயானாவின் சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment