உள்ளூராட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு பல வழிகளிலும் ஆளுந்தரப்பினர் முயல்வதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும், நீதிமன்றூடாக அல்லது புதிய சட்டம் ஒன்றை இயற்றியே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை இனி நிறுத்த முடியும் என விளக்கமளித்துள்ளார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா.
தற்போதைய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை விலகிச் செல்லுமாறு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், புதிதாக ஒரு தேர்தல் ஆணைக்குழு அமையப் பெற்றாலும் அறிவிக்கப்பட்ட தேர்தலை நிறுத்த முடியாது எனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment