பணம் 'அச்சடிப்பதை' நிறுத்திய அரசு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 17 January 2023

பணம் 'அச்சடிப்பதை' நிறுத்திய அரசு!




பெருமளவு சர்வதேச கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கோட்டாபய ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ச்சியாக நாணயத்தாள்களை அச்சடித்து வந்த அரசாங்கம் தற்போது அதனை முற்றாக நிறுத்தியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.


அமைச்சரவை பேச்சாளர் பந்துல இது குறித்து விளக்கமளிக்கையில், இந்நிலை தொடர்ந்தால் எதிர்காலத்திலும் கடன் பெற முடியாத சூழல் உருவாகும் எனவும் தற்போது உலகில் எங்குமே கடன் பெற முடியாதுள்ளதாகவும் இருக்கும் கடன்களை மீளக் கட்டமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கிறார்.


சர்வதேச நாணய நிதியமே சரண் என்ற நிலையிருந்தும் 'உடனடி' உதவிகள் கிடைக்கப் பெறாது என்பது தெளிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment