ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு 'பேச்சுவார்த்தை' நடாத்தி வரும் நிலையில் தற்போது பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்தும் ஆராயப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானைச் சின்னம் அல்லது மொட்டுச் சின்னத்தை முற்படுத்துவது அல்லது வேறு ஒரு பொதுச் சின்னத்தை உள்வாங்குவது குறித்து ஆராயப்படுவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கட்சிகளின் வாக்கு வங்கி அதிகமுள்ள இடங்களில் தற்போதைய சின்னங்களை பாவிப்பதும் பயனுள்ளது என பாலித ரங்கே பண்டார விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment